ஆப்கனில் தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல்: காவல்துறையைச் சேர்ந்த 6 பேர் பலி

ஆப்கனிஸ்தானில், தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் காவல் துறையினர் 6 பேர் கொல்லப்பட்டனர்.தயாக் மாவட்டத்தில் உள்ள காஸ்னி மாகாணத்தில் காவல் துறை சோதனைச் சாவடியை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் உயிரிழந்தவர்கள் அனைவரும் காவல் துறை அதிகாரிகள் என தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்த ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.இந்த தாக்குதலை தலிபான் தீவிரவாதிகள்தான் நடத்தியிருக்கக்கூடும் என ஆப்கன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதேபோன்று அந்தர் மாவட்டத்தி்ல் கடந்த வெள்ளிக்கிழமை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 13 காவல் துறை அதிகாரிகள் பலியானதாக ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply