பெங்களூரு குண்டுவெடிப்பு இருவர் சென்னையில் கைது
பெங்களூருவில் சென்ற வாரம் பாரதீய ஜனதா கட்சி அலுவலகம் அருகே நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிசார் கூறுகின்றனர். சந்தேகநபர்கள் இருவரும் தமிழகத்திலுள்ள சென்னையில் கைதுசெய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.கைதுசெய்யப்பட்டவர்கள் எந்த ஒரு இயக்கத்தையோ குழுவையோ சேர்ந்தவர்களா என்று பொலிசார் தகவல் வெளியிடவில்லை.
16 பேர் காயம் அடைந்திருந்த இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு எந்த ஒரு குழுவும் பொறுப்பேற்றிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் தொடர்பில் வேறு சிலரும் கைதாவார்கள் என பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசிக்கு தகவல் தந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
பாஜக அலுவலகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிளில் குண்டுகள் கட்டப்பட்டிருந்ததாக பொலிசார் கூறியிருந்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply