சிரிய அகதிகளின் எண்ணிக்கை 15 லட்சத்தை தாண்டியது!

சிரியாவில் நடைபெறும் உள்நாட்டு கலவரங்களால் அந்த நாட்டு மக்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த நான்கு மாதங்களில்,  நிலைமை மோசமடைந்துள்ளது. சிரியா அதிபர், பஷார் அல் ஆசாத்தின் ஆட்சிக் காலத்தில் கிட்டத்தட்ட 80,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஐ. நா மதிப்பிட்டுள்ளது. 4. 25 மில்லியன் மக்கள், நாட்டில்  இருந்து இடம் பெயர்ந்துள்ளனர். என்றும் ஐ.நா தெரிவிக்கின்றது.

சிரியாவில் நடைபெறும் உள்நாட்டுக் கலவரங்களால் வெளியேறும் அகதிகளின் எண்ணிக்கை, தற்போது 15 லட்சத்தை தாண்டியுள்ளதாக ஐரோப்பிய யூனியனின் அகதிகள் ஆணையம் தெரிவித்துள்ளது. லெபனானுக்கும், ஜோர்டானுக்கும் அதிகம் பேர் சென்றுள்ளதாகவும், பதிவு செய்யப்பட்டதைவிட அகதிகள் எண்ணிக்கை அதிகமாக இருக்குமென்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சண்டைகள் அதிகரிப்பதாலும், பிரச்சினைகள் நகரங்களில் தொடருவதாலும், கிராமங்களிலும் கட்டுப்பாடுகள் மாறுவதாலும்  இடம் பெயர்வதாக இந்த அகதிகள் தெரித்துள்ளனர். இந்த வருடம் ஆரம்பித்ததில் இருந்து, இதுவரையில் இடம் பெயர்ந்துள்ள ஒரு மில்லியன் அகதிகள் அண்டை நாடுகளில் பதிவு செய்துள்ளதாகவும்இ அவர்களின் தேவைகளுக்கேற்ப கையிருப்பு வளங்கள் இல்லாதது சவாலாக வளர்ந்து வருகின்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply