ஒக்லஹொமா மீட்புப் பணிகளை துரிதப்படுத்த ஒபாமா பணிப்புரை
சூறாவளியின் தாக்கத்திற்கு இலக்கான ஒக்லஹொமா பகுதியில் மீட்புப் பணிகளை துரிதமாக முன்னெடுக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் விசேட உரையாற்றிய ஜனாதிபதி பரக் ஒபாமா இதனைக் குறிப்பிட்டுள்ளார். இடிபாடுகளுக்குள் இருந்து உயிரிழந்தவர்களின் சடலங்கள் சில மீட்கப்பட்டுள்ளதுடன், உயிருடன் எவரையும் மீட்பதற்கான வாய்ப்புக்கள் இனி இல்லையென மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
9 சிறுவர்கள் உள்ளிட்ட 24 பேர் இந்த அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
எனினும், 90ற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக இதற்கு முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன.
காயமடைந்த 200ற்கும் அதிகமானவர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சூறாவளியின் தாக்கத்தினால் ஒக்லஹொமா பிராந்திய மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply