நவனீதம்பிள்ளை ஆகஸ்டில் இலங்கை வருகிறார்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நவனீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 25ம் திகதி முதல் 31ம் திகதி வரையில் இலங்கையில் தங்கியிருப்பார் எனக் குறிப்பிடப்படுகிறது. 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கை அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பின் அடிப்படையில், நவனீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
நாட்டின் நிலைமைகள் குறித்து நேரில் கண்டறிந்து கொள்வதற்கு இந்த விஜயம் சந்தர்ப்பமாக அமையும் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனீவாவிற்கான பிரதிநிதி ரவினாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த விஜயம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையுடனான உறவுகளை மேம்படுத்த உதவும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply