காங்கிரஸ் கட்சியில் பிரதமர் வேட்பாளராக ராகுல் நிறுத்தப்படுகிறார்: நாராயணசாமி
மத்திய மந்திரி நாராயண சாமி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-பா.ஜனதா கட்சி சார்பில் பிரதமர் வேட்பாளாரக நரேந்திர மோடி போட்டியிடலாம் எனத் தெரிகிறது. காங்கிரஸ் கட்சி சார்பில் பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தி நிறுத்தப்பட அதிக வாய்ப்பு உள்ளது. தற்போது புதிய மந்திரிகள் பதவி ஏற்பின் போது 2014-ம் ஆண்டு ராகுல் பிரதமர் பதவியை ஏற்க வேண்டும் என்று மன்மோகன் சிங் கூறியுள்ளார்.2004-ம் ஆண்டு பிரதமர் பதவியை மன்மோகன் சிங்குக்கு சோனியா கொடுத்தார். 2014-ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு பிரதமர் பதவியை ராகுல் காந்தியிடம் மன்மோகன் சிங் ஒப்படைக்க உள்ளார். இந்த பெருந்தன்மை காங்கிரஸ் கட்சியில் மட்டுமே உள்ளது.
பாரதீய ஜனதா கட்சியில் பிரதமர் பதவிக்கு குடுமிபிடி சண்டை நடக்கிறது. மோடியை ஏற்க அத்வானி மறுக்கிறார். அத்வானியை ஏற்க மோடி மறுக்கிறார். அருண்ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் ஆகியோரும் பிரதமர் பதவிக்கு ஆசைப் படுகிறார்கள். இவர்களால் நாட்டு மக்களுக்கு என்ன செய்ய முடியும்.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றுள்ளனர். அவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழக மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள்.
டெல்லி மேல்சபை தேர்தலில் தே.மு.தி.க.வினர் எங்களிடம் ஆதரவு கேட்டுள்ளனர். சோனியாதான் இதுபற்றி முடிவு எடுப்பார்.
குன்னூரில் பயிற்சி பெறும் இலங்கை ராணுவ அதிகாரிகள் 2 பேரை திருப்பி அனுப்புமாறு பாதுகாப்பு துறை மந்திரி மற்றும் பாதுகாப்பு துறை செயலாளரிடம் வலியுறுத்தியுள்ளோம். இருவரும் விரைவில் திருப்பி அனுப்பப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply