ராஜ்ய சபைத் தேர்தலில் கனிமொழியை ஆதரிக்கப்போகிறது புதிய தமிழகம்
மனிதநேய மக்கள் கட்சியைத் தொடர்ந்து இப்போது புதிய தமிழகமும் திமுகவை ஆதரிக்க முன் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. புதிய தமிழகத்தின் தலைவர் டாக்டர் கி
ருஷ்ணசாமி காலையில் திமுக தலைவர் கருணாநிதியை அவரது சிஐடி காலனி இல்லத்தில் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில், அஇஅதிமுகவின் நான்கு வேட்பாளர்களுக்கோ அல்லது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி இராஜாவிற்கோ தங்கள் கட்சி வாக்குகள் தேவைப்படாது என்ற நிலையில், தங்களது இரு வாக்குக்களை வீணாக்க விரும்பாமல், திமுக வேட்பாளரை ஆதரிக்கவிருப்பதாகத் தெரிவித்தார்.இவ்வாறாக கனிமொழிக்கு 27 வாக்குகள் (திமுக – 23, மனித நேய மக்கள் கட்சி ௲ 2, புதிய தமிழகம் ௲ 2) உறுதிசெய்யப்பட்டுவிட்டன.
ஐந்து உறுப்பினர்கள் கொண்ட காங்கிரசும் மூன்று உறுப்பினர்கள் கொண்ட பாமகவும் இன்னும் தங்கள் நிலைப்பாட்டினைத் தெரிவிக்கவில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply