சுவிட்சர்லாந்தில் கருப்பு பணம் பதுக்கும் பாகிஸ்தானியர்கள்

சுவிட்சர்லாந்து மத்திய வங்கி ஆண்டறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போது இந்தியர்களை விட பாகிஸ்தானியர்கள் அங்கு அதிக அளவில் கருப்பு பணம் முதலீடு செய்துள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி நிலவரப்படி பாகிஸ்தானை சேர்ந்தவர்களின் ஒட்டு மொத்த முதலீடு ரூ.9200 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்தியர்களின் கருப்பு பண முதலீட்டை விட அதிகமாகும். ஏனெனில் இந்தியர்களின் முதலீடு 9 ஆயிரம் கோடியாக உள்ளது. மக்கள் தொகை மற்றும் நிலப்பரப்பு அடிப்படையில் இந்தியாவை விட பாகிஸ்தான் மிகச் சிறிய நாடு. இருந்தாலும், அது கருப்பு பண முதலீட்டில் இந்தியாவை மிஞ்சி நிற்கிறது. இருந்தாலும் இது கடந்த ஆண்டை ஒப்பீடுகையில் பாகிஸ்தானியர்களின் முதலீடு 32 சதவீதம் குறைவாகும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply