அமரர் தொண்டமானின் 14ஆவது சிரார்த்த தினம் அனுஷ்டிப்பு
மலையக தந்தையும், இ.தொ.கா.வின் ஸ்தாபகருமான அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 14 ஆவது சிரார்த்த தின அனுஷ்டிப்பு நிகழ்வுகள் இன்று இடம்பெற்றுள்ளன.இதனையொட்டி மலையகத்தின் பல பிரதேசங்களிலுமுள்ள ஆலயங்களிலும் அன்னாரை நினைவுகூரும் வகையில் விசேட பூஜைகள் இடம்பெற்றுள்ளதோடு கொழும்பு பழைய பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள அன்னாரது உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மரியாதையும் செலுத்தப்பட்டது.பழைய பாராளுமன்றக் கட்டடத் தொகுதியிலுள்ள அன்னாரின் உருவச்சிலைக்கு பிரதிய மைச்சர் முத்துசிவலிங்கம், நிர்வாக உப தலைவரும் சடத்தரணியுமான கா.மாரிமுத்து, மத்திய மாகாண அமைச்சர் முத்தையா இராமசாமி உட்பட பலர் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply