புலிகள் பலம் கொண்டிருந்த வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்ற முடியாது : மகிந்த

விடுதலைப்புலிகளின் பலம்வாய்ந்த பகுதியாகவிருந்த வட பகுதியிலிருந்து இராணுவத்தினை வாபஸ் பெறுவது தொடர்பான சாத்தியங்களை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.வட பகுதியிலிருந்து இராணுவத்தினை நாம் வெளியேற்றுவது தொடர்பாக கோரிக்கைகள்  முன்வைக்கப்படுகின்றன. ஆனால்  இது நடைமுறைச் சாத்தியமான  விடயமல்ல. எச்சந்தர்ப்பத்திலும் வட பகுதியிலிருந்து இராணுவத்தினை வெளியேற்றப் போவதில்லையென   ஜனாதிபதி ராஜபக்ஷ  று கூறியுள்ளார்.பயங்கரவாதத்தினை வெற்றிகரமாக தோற்கடித்து வரலாறு படைத்துள்ள இலங்கை அரசாங்கம் போருக்கு பின்னரான காலப்பகுதியை சிறிந்த முறையில் முகாமைத்துவம் செய்து வருகின்றது. இதனை அவதானத்தில் கொண்டு பயங்கரவாத ஒழிப்புக்கான உதாரணமாக இலங்கையை கருத வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பான அனுபவத்தினை ஏனைய நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய தேவையுள்ளதெனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் ஒரு நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு பாதுகாப்பு படைகளின் ஆதரவு மிகவும் முக்கியமானதொன்றாகும் எனவும் சுட்டிக்காட்டினார்.

போர் நிறைவுற்ற காலப்பகுதியிலிருந்து இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள சில எதிரனிகள் அரசாங்கம்  போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதுவிதமான உதவிகளையும் வழங்குவதில்லையென்ற குற்றச்சாட்டுக்களுடன் பிரிவினை  வாத சிந்தனையினை பரவச்செய்வதற்கு முயற்சிக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பயங்கரவாதத்திற்கு காரணமாகவிருந்த சகல வேர்களையும் அளிப்பதற்காக நாடலாவிய ரீதியில் பாரிய அபிவிருத்தித்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, மீதமுள்ள எதிரணி குழுக்கள் சிலவற்றையும் விரைவில் அளிப்பதற்கு சமாதானத்தை  விரும்பும் பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டுமெனவும் கோரியிருந்தார்.

விடுதலைப் புலிகளை வெற்றி கொண்டு நான்கு வருடங்கள் கழிந்துள்ள நிலையிலும் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு அரசாங்கம் எந்தவிதமான நிவாரணங்களையும் வழங்கவில்லையெனக் குற்றஞ்சாட்டப்படுகின்றது  எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

குற்றச்சாட்டுக்களும் வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்ற வேண்டுமென்ற  கோரிக்கைகளும் சம நேரத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும்  அவர் சுட்டிக்காட்டினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply