இலங்கை வடக்கு மாகாண முதல்–மந்திரி விக்னேஷ்வரன் ஆஸ்பத்திரியில் அனுமதி
இலங்கை வடக்கு மாகாண முதல் மந்திரி விக்னேஷ்வரன் சில ஆண்டுகளுக்கு முன்பு இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்த நிலையில் நேற்று அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் யாழ்பாணத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழர்கள் மத்தியல் தகவல் பரவியது. ஆனால் இதை தமிழ் தேசிய கூட்டணி எம்.பி. செல்வம் அடைக்கலநாதன் மறுத்தார். அவருக்கு மாரடைப்பு எதுவும் ஏற்படவில்லை. ஏற்கனவே இருதய ஆபரேஷன் செய்திருந்ததால் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக தான் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பயப்படும்படியாக எதுவும் இல்லை. அவருக்கு மாரடைப்பும் ஏற்பட வில்லை என்று கூறினார்.
இலங்கையில் உள்ள அமெரிக்காவுக்கான தூதர் மைக்கேல் சிசான் நேற்று யாழ்பாணம் சென்றிருந்தார். அவரை சந்தித்து விட்டு வந்த சிறிது நேரத்தில் நெஞ்சுவலி ஏற்பட்டு விக்னேஷ்வரன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply