தீபத்திருநாள் மகிழ்ச்சியையும் சமாதானத்தையும் கொண்டு வரட்டும்: ஜனாதிபதி

தீபத்திருநாள், இந்து சமய போதனைகளை பின்பற்றும் எல்லோர் மத்தியிலும் மகிழ்ச்சியையும் சமாதானத்தையும் புரிந்துணர்வையும் கொண்டு வரவேண்டுமென பிராத்திக்கின்றேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தீபாவளிப்பண்டிகையை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தீபத்திருநாள் தீபாவளி தீயவற்றை நீக்கி நன்மையையும் அறியாமையையும் நீக்கி அறிவுடமையையும் இருளை நீக்கி ஒளியையும் வெற்றி கொள்வதை அடையாளப்படுத்தி நிற்கிறது.இலங்கை வாழ் இந்துக்கள் வழிபாடுகள், ஆன்மீக வணக்கங்கள் மூலம் இந்த விசேட பண்டிகையை கொண்டாடுவதில் உலகெங்கிலும் உள்ள இந்து மக்களுடன் இணைந்து கொள்கின்றனர். அறியாமையிலிருந்து எழும் தீயவற்றை வெற்றிக்கொள்வதற்கு அறிவுடைமையையும் புரிந்துணர்வையும் அடைந்து கொண்டமைக்காக தெய்வங்களுக்கு தங்களது நன்றியை வெளிப்படுத்தும் முகமாக கோயில்களில் விளக்கேற்றி, வீடுகளை விளக்குகளால் அலங்கரிக்கின்றனர். இது உலக சடப்பெறுமானங்களால் நிறைந்த மனித நடைமுறைகளை கடந்த இந்து சமயத்தின் உயர்ந்த ஆன்மீகப் பெறுமானங்களின் ஒரு கொண்டாட்டமாகும்.

அன்புணர்வும் அர்ப்பணமும் நிறைந்த இந்தத் தீபாவளித்திருநாள் இந்து சமயத்தின் சகல ஆன்மீகப் பெறுமானங்களினாலும் ஒதுக்கப்படும் வன்முறை மற்றும் பகைமை கொண்ட மூன்று தசாப்தகால நீண்ட போராட்டத்தின் பின்னரான புதிய நல்லிணக்க உணர்வில் வேற்றுமைகளைக் களைந்து சமூகங்களுக்கு மத்தியில் புரிந்துணர்வை வளர்த்து, சுபீட்சத்தை அதிகரிக்கும் இந்துக்களுக்கான ஒரு முக்கிய நிகழ்வாகும்.

இத்தீபத்திருநாள், இந்து சமய போதனைகளைப் பின்பற்றும் எல்லோர் மத்தியிலும் மகிழ்ச்சியையும் சமாதானத்தையும் புரிந்துணர்வையும் கொண்டு வர வேண்டும் என பிராத்திக்கின்றேன்.

இலங்கை வாழ் இந்துக்களுக்கு எனது மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply