மாலி நாட்டில் பிரான்ஸ் ரேடியோ நிருபர்கள் 2 பேர் கடத்திக் கொலை
பிரான்சை சேர்ந்தவர்கள், கிஸ்லெய்ன் துபோந்த், கிளோடு வெர்லோன். இவர்கள் இருவரும் பிரான்சை சேர்ந்த ரேடியோ நிருபர்கள். இவர்கள் மாலி நாட்டில் தங்கி பணி புரிந்தனர். கிடல் நகரில் தங்கியிருந்த இவர்கள் மாலி அரசுக்கு எதிராக செயல்படும் துராக் பிரிவினை வாதிகளின் செய்தி தொடர்பாளரை பேட்டி எடுக்க சென்றிருந்தனர்.அப்போது அங்கு வந்த சிலர் அவர்களை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர். இச்சம்பவம் நேற்று முன்தினம் நடந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த பிரான்ஸ் அதிபர் ஹோலண்டே மாலி அதிபர் இப்ராகிமுடன் தொடர்பு கொண்டு அவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொண்டார். அதற்குள் கடத்தப்பட்ட நிருபர்கள் 2 பேரும் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர்.
கடத்திய நபர்கள் அவர்களை கொன்று பிணத்தை வீசி சென்றது தெரிய வந்தது. இச்சம்பவத்துக்கு பிரான்ஸ் அதிபர் ஹோலண்டே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மாலி நாட்டில் கிடல் பகுதி பிரிவினைவாதிகள் பிடியில் இருந்தது. அதை பிரான்ஸ் ராணுவம் மீட்டு கொடுத்தது. தற்போது மாலியில் தொடர்ந்து முகா மிட்டுள்ளது. இதற்கு பழி வாங்கவே தீவிரவாதிகள் பிரான்ஸ் நிருபர்களை கடத்தி சென்று கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply