போர்க் குற்றங்கள் குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு கோரிக்கை

இலங்­கையில் இறுதிப் போரில் மேற்­கொள்­ளப்­பட்ட போர்க்­குற்­றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்­க­ளுக்கு எதி­ரான குற்­றங்கள் தொடர்பில் சுதந்­தி­ர­மான சர்­வ­தேச விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும் என பிரித்­தா­னி­யாவின் தொழிற் கட்­சியின் தலைவர் மிலிபேண்ட் கோரிக்கை விடுத்­துள்ளார்.இந்த மாத நடுப் பகு­தியில் இலங்­கையில் நடை­பெ­ற­வுள்ள பொது­ந­ல­வாய நாடு­களின் மாநாடு தொடர்பில் பிரித்­தா­னிய தமிழர் பேர­வையின் உறுப்­பி­னர்­க­ளுக்கும், அவ­ருக்கும் இடையில் லண்­டனில் நடை­பெற்ற கலந்­து­ரை­யாடல் ஒன்றின் போதே அவர் இதனை கூறினார்.

இலங்­கையில் தொடரும் மனித உரிமை மீறல்கள், போர்க்­குற்­றங்­க­ளுக்கு பொறுப்புக் கூற­வேண்­டிய விட­யங்­களை காரணம் காட்டி இலங்­கையில் நடை­பெறும் பொது­ந­ல­வாய நாடு­களின் மாநாட்டை புறக்­க­ணிக்க வேண்டும் என்ற நிலைப்­பாட்டை தொழிற்­கட்சி இருந்து வரு­வதை பிரித்­தா­னிய தமிழர் பேரவை வர­வேற்­றுள்­ளது.

அதே­வேளை இலங்­கையின் நல்­லி­ணக்கம்? என்ற தலைப்­பி­லான பேர­வையின் புதிய அறிக்­கையின் பிர­தி­யொன்றும் மிலி­பேண்­டிடம் கைய­ளிக்­கப்­பட்­டது.

இலங்­கையில் தொடரும் மனித உரிமை மீறல்கள், நில அப­க­ரிப்பு, பொரு­ளா­தார அடக்­கு­முறை மற்றும் ஏனைய குற்றச் செயல்கள் தமி­ழர்­க­ளுக்கு எதி­ராக இலங்­கையில் தற்­பொ­ழுதும் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றமை தொடர்பில் அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள மர­ணங்கள், காணாமல் போன­வர்­களின் விட­யங்கள், காய­ம­டைந்­த­வர்கள், வித­வை­களின் நிலை­மைகள் தொடர்பில் மிலிபேண்ட் அதிர்ச்சி வெளிட்­டுள்ளார்.

தனது சகாக்களுடன் இந்த விடயங்கள் குறித்து பகிர்ந்து நம்பிக்கையூட்டும் உரிய முனைப்புகளை மேற்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply