இந்திய மீனவர்கள் 30 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம், புதுக்கோட்டை மீனவர்கள் 30 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படையினர் இன்று (05) சிறைபிடித்தனர்.இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மேலும் 25 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ராமேஸ்வரம், புதுக்கோட்டையை சேர்ந்த 25 மீனவர்கள் 7 விசைப்படகுகளில் இன்று காலை கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்ததாக கூறப்படுகிறது.
மீன்களை கொள்ளையடித்ததோடு, மீன்பிடி சாதனங்களையும் இலங்கை கடற்படையினர் எடுத்துக் சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்திய மீனவர்கள் 30 பேர் நைனாதீவு கடற்பரப்பில் 7 படகுகளுடன் கைது செய்யப்பட்டதாகவும் அவர்கள் காங்கேசன்துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு மீனவத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவர் எனவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் கமான்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply