பொதுநலவாய மாநாட்டில் செய்தி சேகரிப்புக்கு 800 ஊடகவியலாளர் பதிவு
நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டின் செய்தி சேகரிப்புக்காக ஏறக்குறைய 800 ஊடகவியலாளர்கள் பதிவு செய்துள்ளதாக ஊடக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
எதிர்வரும் 10ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை இலங்கையில் நடைபெறவுள்ள 52 பொது நலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் மாநாட்டினது தகவல் திரட்டும் பணிக்காக 530 உள்ளுர் ஊடகவியலாளர்களும் 300 சர்வதேச ஊடகவியலாளர்களும் பதிவு செய்துள்ளதாக அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.உள்ளூர் ஊடவியலாளாக்ளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் நிறைவுற்றுள்ளதாகக் குறிப்பிடுகின்ற அமைச்சு சர்வதேச ஊடகவியலாளர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் தொடர்வதாக சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், சர்வதேச ஊடகவியலாளர்கள் 500 பேர் வரை நடைபெறவுள்ள பொது நலவாய மகாநாட்டில் பங்குகொள்வர் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஊடக அமைச்சு தெரிவிக்கிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply