ஒரு தொன் எடை செய்மதி பூமியில் விழும் அபாயம்

ஐரோப்பிய செய்மதி ஒன்று அடுத்த ஒருசில தினங்களுக்குள் பூமியில் விழவிருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. எனினும் பூமியை நோக்கிவரும் இந்த செய்மதி எங்கே, எப்போது விழும் என்பது குறித்து எதிர்வுகூற முடியாதிருப்பதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். ஒரு தொன் எடை கொண்ட இந்த செயற்கைக் கோள் சுமார் 25 முதல் 45 துண்டுகளாக உடைந்து பூமியில் விழும் என எதிர்பாக்கப்படுகிறது. இதிலே மிகப்பெரிய துண்டு 200 பெளண்ட்ஸ் அளவு பாரம் கொண்டதாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த விண்வெளிக் குப்பையிலிருந்து பூமியின் நிலப்பகுதி அபாயம் இன்றி காப்பாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.கட்டுப்பாடின்றி செய்மதி குப்பைகள் பூமியில் விழுவது இது முதல் முறை யல்ல. இந்த ஆண்டில் மாத்திரம் சுமார் 100 தொன் குப்பைகள் பூமியில் விழுந்துள்ளன. எனினும் இவ்வாறான மோதலால் எவரும் பாதிப்புக்குள்ளானதாக இதுவரை தகவலில்லை.

விண்கலம் பூமியில் எங்கு மோதவிருக் கிறது என்பது பற்றி கணிப்பது மிக கடினமாக இருப்பதாக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் ஈர்ப்பு விசை மற்றும் நிலையான கடல் நீரோட்டம் தொடர்பான அவதானிப்பு நிலையத்தின் முகாமையாளர் ரன் பிளோ பகன் குறிப்பிட்டார். “எமது உச்ச கட்ட பொறியியல் தொழில்நுட்பத்தைக் கொண்டு இந்த செய்மதி குப்பைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பூமிக்குள் நுழைய வாய்ப்பு இருப்பதாக கணித்திருக் கிறோம். இது திங்கட்கிழமை அளவில் பூமியுடன் மோத வாய்ப்பு இருக்கிறது” என்றார். ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் இந்த செய்மதியின் பயணம் கடந்த மாதத்தில் நாளொன்றுக்கு 2.5 மைல்களாக குறைவடைந்து வந்தது. ஒவ்வொரு 88 நிமிடங்களுக்கு பூமியை சுற்றி வட்டமிடும் இந்த செய்மதி கடந்த புதன்கிழமை ஆகும் போது அதனது சுற்றுப்பாதையை பூர்த்தி செய்ய 113 மைல்கள் எஞ்சி இருந்தது.

இந்நிலையில் பூமியின் அனைத்து திசைகளிலும் வலம் வந்து கொண்டிருக்கும் இந்த செய்மதி ஒரு தருணத்தில் பூமியை நோக்கி விழ வாய்ப்பு உள்ளது.

புவியீர்ப்பு மற்றும் கடல் நீரோட்டம் தொடர்பாக ஆய்வு நடந்த கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் விண்ணில் ஏவப்பட்ட இந்த செய்மதியில் எரிசக்தி கடந்த மாதம் முடிவடைந்தது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply