இலங்கை அரசின் ஏற்பாடுகளுக்கு பொதுநலவாய அமைப்பின் செயலகம் எதிர்ப்பு
கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொள்ளும் அரச தலைவர்களை தனித்தனியாக அழைத்துச் செல்லும் ஏற்பாடுகளுக்கு பொதுநலவாய அமைப்பின் செயலகம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.மாநாட்டில் கலந்துகொள்ள வரும் அரச தலைவர்களை தாமரைத் தடாகத்தில் (நெலும் பொக்குண) இருந்து பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்திற்கு அழைத்துச் செல்ல இலங்கை அரசாங்கம் விலை உயர்ந்த பென்ஸ் கார்களை இறக்குமதி செய்துள்ளது.
தலைவர்கள் தலா ஒரு பென்ஸ் காரில் ஏற்றப்பட்டு அந்த வாகனங்களுக்கு பின்னாலும் முன்னாலும் யானைகள் மற்றும் குதிரைகள் செல்ல தலைவர்களை மண்டபத்திற்கு அழைத்துச் செல்ல அரசாங்கம் ஏற்பாடுகளை செய்துள்ளது.
எனினும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள பொதுநலவாய நாடுகளின் செயலகம், ஆடம்பர சொகுசு பஸ் ஒன்றில் பாதுகாப்பாக சகல தலைவர்களும் மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.
எவ்வாறாயினும் இது சம்பந்தமாக இரண்டு தரப்பினருக்கும் இடையில் இழுபறி நிலை தொடர்வதுடன் இதுவரை இறுதி முடிவுகள் எடுக்கப்படவில்லை என்று தெரிகின்றது.
இதனிடையே பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் பிரித்தானிய மகாராணிக்கு பதிலாக கலந்து கொள்ளும் இளவரசர் சார்ள்ஸ் 24 மணிநேரத்திற்கும் குறைவான காலமே இலங்கையில் தங்கியிருப்பார் எனத் தெரியவருகிறது.
15ஆம் திகதி பகல் இலங்கை வரும் அவர் 16 ஆம் திகதி மதியத்திற்கு முன்னதாக இலங்கையில் இருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன் இளவரசர் சார்ள்ஸ_க்காக கொழும்பு சினமன் கார்டன் ஹோட்டலில் இராப்போசனம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுடன் அதில் கலந்து கொள்ள உள்ளவர்களுக்கான அழைப்பு லண்டன் பங்கிங்ஹாம் அரண்மனை ஊடாகவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது..
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply