CHOGM மாநாடு: நாடு தயார் நிலையில் அமைச்சர் பசில் ராஜபக்ஷ
பொது நலவாய மாநாட்டிற்கான சகல தயார்படுத்தல்களையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களின் மாநாடு மற்றும் மற்றைய மாநாடுகளுக்குத் தேவையான சகல நடவடிக்கைகளும் அரசாங்கத்தினால் தயார்படுத்தப்பட்டுள்ளன. இதேவேளை இந்த மாநாடுகளில் கலந்துகொள்ளும் அரச தலைவர்கள், அமைச்சர்கள், பிரமுகர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அடங்கலாக சகலரும் இலங்கையில் சுற்றுப்பயணங்களை மேற்கொள்வதற்கு தேவையான வசதிகளும் அரசாங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள தாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.பொதுநலவாய மாநாட்டின் அரச தலைவர்களின் மாநாடு இரண்டு நாட்களுக்கு கொழும்பில் நடைபெறும் அதேவேளை, அதற்கு சமாந்திரமாக 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை பொதுநலவாய மக்கள் அமைப்பு மாநாடு ஹிக்கடுவையிலும், இன்று 10ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை இளைஞர் மாநாடு அம்பாந்தோட்டையிலும் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply