இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்–கமிலா தம்பதியர் மும்பை தீவிரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்– கமிலா பார்க்கர் தம்பதியர் நேற்று மும்பையில் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் செய்தனர். அப்போது தீவிரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு மலர் வளையம் வைத்து சார்லஸ் அஞ்சலி செலுத்தினர். இங்கிலாந்து நாட்டின் இளவரசர் சார்லஸ்– கமிலா பார்க்கர் தம்பதியர் 9 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளனர்.அவர்கள் நேற்று மும்பையில் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் செய்தனர். 2008–ம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானவர்களுக்கு தாஜ் ஓட்டலில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அங்குள்ள நினைவு சின்னத்துக்கு இளவரசர் சார்லஸ் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா, தற்போதைய தலைவர் மிஸ்திரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து சார்லஸ் தனது மனைவியுடன் மும்பையில் உள்ள குழந்தைகள் பகல் நேர காப்பகத்துக்கு சென்றார். அங்கு குழந்தைகள், பெற்றோர்களை சந்தித்து உரையாடினார்கள். அங்குள்ள வகுப்பறையையும் பார்வையிட்டனர்.
பின்னர் சார்லஸ் தம்பதியினர் தொழில் அதிபர்களுடன் பன்னாட்டு நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு குறித்து ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து கோத்ரேஜ் சதுப்பு நில பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள மூலிகை தோட்டத்தை பார்வையிட்டனர். அங்கு படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
சார்லஸ் தம்பதியினர் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) மும்பையில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள். நாளை (திங்கட்கிழமை) புனேயில் சுற்றுப்பயணம் செய்ய முடிவு செய்து உள்ளனர். அப்போது தொழில் முனைவோர் நிகழ்ச்சி ஒன்றிலும் கலந்து கொள்கிறார்கள்.
இந்தியாவின் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு அவர்கள் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க செல்கிறார்கள்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply