அவுஸ்திரேலியா , நியூஸிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடுத்து வைப்பு

இலங்கைக்கு சென்றுள்ள அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் தடுத்து வைக்கப் பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் லீ ரைனோன் மற்றும் நியூஸிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் யான் லொக்கி ஆகிய இருவருமே இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர கொழும்பில் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்துவதற்கு முயன்றனர் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவ்விருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இவ்விருவரும் வடக்கிற்கு சென்றதுடன் யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் பற்றியும் பிரதேசத்திலுள்ள பிரச்சினைகள் பற்றியும் வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனுடன் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கதாகும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply