30 ஆண்டுகால யுத்தம் நாட்டையும் மக்களையும் பாரியளவில் நெருக்கடிக்குள் ஆழ்த்தியது :ஜனாதிபதி மஹிந்த

நிரந்தரமான சமாதானத்தையே இலங்கை விரும்புகின்றது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வெறுமனே சமாதானத்தை அன்றி நிரந்தரமான சமாதானத்தையே இலங்கை அரசாங்கம் விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் இளைஞர் மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.30 ஆண்டுகால யுத்தம் நாட்டையும் மக்களையும் பாரியளவில் நெருக்கடிக்குள் ஆழ்த்தியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நிரந்தரமான சமாதானம் நாட்டின் அபிவிருத்தியை உறுதி செய்ய வழியமைக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் பௌதீக ஒருமைப்பாட்டை பேணிப் பாதுகாப்பதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply