பிரித்தானிய பிரதமரிடம் சில கேள்விகள் எழுப்பப்படும் : ஜனாதிபதி

பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனிடம் சில கேள்விகள் எழுப்பப்பட உள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்கும் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடாத்த ஜனாதிபதி இணங்கியுள்ளார்.இந்த சந்திப்பின் போது பிரித்தானிய பிரதமரிடம் சில கேள்விகளை எழுப்ப உள்ளதாகக் குறிப்பிட்டு;ள்ளார். மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் சில முக்கியமான கேள்விகளை இலங்கை ஜனாதிபதியிடம் எழுப்ப உள்ளதாகத் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகள் கோட்பாடுகள் முழுமையாக அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமை விவகாரங்களில் எதனையும் மறைக்க வேண்டிய அவசியம் கிடையாது என அவா குறிப்பிட்டுள்ளார். யாரேனும் மனித உரிமைகளை மீறிச் செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். ஏனைய தரப்பினரின் கருத்துக்களை கேட்கத் தயார் எனவும் அதேபோன்று அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும் அறிந்து கொள்ள ஏனைய தரப்பினர் முனைப்பு காட்ட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை பிளவுபடுத்த எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 30 ஆண்டுகளாக யுத்தம் நடைபெற்றதாகவும், மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டதனை மக்கள் வரவேற்று வருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply