கதிரியக்கப் பொருட்களை கொண்டு சென்ற ஒரு வாகனம் திருடப்பட்டுள்ளது

கதிரியக்க பொருட்களைக் கொண்டு சென்ற ட்ரக் வண்டி ஒன்று மெக்சிகோவில் கடத்தப்பட்டுவிட்டதாக ஐநாவின் அணுக் கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளது.
மருத்துவ சிகிச்சையில் பயன்படுத்தப்பட்ட ”ஆபத்தான கதிரியக்க மூலங்களை’ கொண்டு சென்ற வாகனம் கடத்தப்பட்டதாக மெக்சிகோ, சர்வதேச அணு சக்தி நிறுவனத்துக்கு அறிவித்துள்ளது.புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்கும் கதிரியக்க சிகிச்சை இயந்திரம், மருத்துவமனையில் இருந்து கழிவு மையம் ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்டுக்கொண்டிருந்துள்ளது. தலைநகர் மெக்சிகோ நகருக்கு அருகே வைத்து அது திருடப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply