கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொண்ட காணாமல் போனோரின் மீது தாக்குதல்

திருகோணமலை பஸ் நிலையத்திற்கு முன்பாக காணாமல் போனோரின் உறவுகளால் இன்று முற்பகல் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் போது இனந்தெரியாத நபர்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.காணாமற் போனோரை தேடியறியும் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் காணாமல் போனோரின் உறவுகள் பலர் கலந்து கொண்டிருந்தனர். ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து கொண்டிருந்த போது இடையில் வந்த இனந்தெரியாத நபர்கள் சிலர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது பொலிஸார் அருகில் இருந்தும் தாக்குதல் மேற்கொண்டவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply