3 ஊழல் வழக்குகளில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் சர்தாரிக்கு நேரில் ஆஜராக கோர்ட்டு சம்மன்
பாகிஸ்தான்முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தார் (58). இவர் கடந்த செப்டம்பர் மாதம் பதவி விலகினார். இவர் மீது ஏற்கனவே ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அதிபர் பதவியில் இருந்ததை தொடர்ந்து கோர்ட்டு வழக்கு விவகாரங்களில் அவருக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது. தற்போது பதவி விலகியதை அடுத்து அந்த வழக்குகள் மீண்டும் உயிர் பெற்று விட்டன.இந்த நிலையில், பாகிஸ்தான் தேசிய ஊழல் தடுப்பு பிரிவு சர்தாரி மீது 5 ஊழல் வழக்குகளை பதிவு செய்துள்ளது. அதில் 3 வழக்குகள் மீது தற்போது கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது.
நேற்று நடைபெற்ற விசாரணையின் போது சர்தாரி கோர்ட்டில் ஆஜராகவில்லை. எனவே, அவரது வக்கீலும், முன்னாள் சட்ட மந்திரியுமான பருக்எச்நயக் ஆஜராகி மனு தாக்கல் செய்தார்.
அதில், ‘பாதுகாப்பு காரணம் கருதி சர்தாரி கோர்ட்டில் ஆஜராக முடியவில்லை. அவருக்கு அரசு பாதுகாப்பு வழங்கியதும் அடுத்த விசாரணையின் போது ஆஜராவார்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி வருகிற 23–ந் தேதிக்குள் ஆசிப்அலி சர்தாரியும், சாட்சிகளும் நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply