ஆளும் கட்சியில் இணைந்துகொள்ளும் உத்தேசம் கிடையாது : சரத் பொன்சேகா

ஆளும் கட்சியில் இணைந்து கொள்ளும் உத்தேசம் கிடையாத என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகா ஆளும் கட்சியில் இணைந்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக அண்மையில் சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன. அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் சரத் பொன்சேகா ஆளும் கட்சியில் இணைந்து கொள்ளத் தி;ட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. பசியாலை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அரசாங்கத்துடன் இணையும் உத்தேசம் கிடையாது எனவும் அரசாங்கத்தை கவிழ்க்கும் எந்தவொரு சக்தியுடனும் இணைந்து செயற்படத் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தாம் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ள உள்ளதாக வெளியான தகவல்கள் சர்வாதிகாரிகளின் சூழ்ச்சித் திட்டமாகக் கருதப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வளவு நெருக்கடிகளை எதிர்நோக்கினாலும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளும் திட்டமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply