மறைந்த மண்டேலாவின் உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது: ஏராளமானோர் நேரில் அஞ்சலி
தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபரும் கறுப்பின தலைவருமான நெல்சன் மண்டேலா ஜோகனஸ்பர்கில் உள்ள தனது வீட்டில் கடந்த 6-ந் தேதி மரணம் அடைந்தார்.அவரது மறைவுக்கு பல்வேறு நாடுகளும் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில் நேற்று ஜொகனஸ்பர்க் நகரில் உள்ள எப்.என்.பி மைதானத்தில் உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்ட இரங்கல் கூட்டம் நடைபெற்றது.பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட பல நாட்டு தலைவர்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ராணுவ மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட மண்டேலாவின் உடல் இன்று பொதுமக்கள் பார்வைக்காக பிரட்டோரியாவில் உள்ள ஒன்றிய கட்டிடத்தில் வைக்கப்பட்டது. மக்கள் அவருக்கு மரியாதை செலுத்த அணிவகுத்த வண்ணம் வருகின்றனர்.
பொதுமக்களும், பல்வேறு நாட்டு தலைவர்களும் அவரது உடலுக்கு மரியாதை செலுத்து வகையில் 3 நாட்கள் அங்கு வைக்கப்பட்டிருக்கும். பின்னர் வரும் ஞாயிற்றுக்கிழமை மண்டேலாவின் உடல் அவரது சொந்த ஊரான குனுவிற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிச்சடங்குகள் செய்யப்படவுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply