இலங்கையில் ஊடகப் பயங்கரவாதம் நிலவி வருகின்றது : மங்கள சமரவீர

இலங்கையில் ஊடகப் பயங்கரவாதம் நிலவி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். சில தரப்பினர் இலங்கையில் ஊடகப் பயங்கரவாதத்தை மேற்கொண்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஊழல் மோசடிகள் குறித்து தகவல்கள் வெளியிடப்படுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சியை பலவீனப்படுத்துவதில் சில ஊடக நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியை பலவீனப்படுத்தி அரசாங்கத்திற்கு வலு சேர்க்கும் முனைப்புக்களே மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். சில ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஊடக ஒழுக்க விதிகளுக்கு புறம்பான வகையில் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். ஊடக சுதந்திரம் பற்றி பேசும் ஊடக நிறுவனங்கள், ஊடக ஒழுக்க விதிகளைப் பேணுவதில்லை என அவர் வருத்தம் வெளியிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply