ஆப்கன்- பாகிஸ்தான் எல்லையில் படகு மீது அமெரிக்க ஏவுகணை தாக்குதல்: 7 தீவிரவாதிகள் பலி
பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள ஹைபர்மலை பகுதியில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை அமெரிக்கா ஆளில்லா விமானங்களை (டிரோன்) மூலம் ஏவு கணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் எல்லையில் ஓடும் காபூல் ஆற்றில் தீவிரவாதிகள் படகு சவாரி செய்வதாக அமெரிக்க உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.
எனவே இந்த இலக்கை குறி வைத்து டிரோன் மூலம் அமெரிக்கா 2 ஏவுகணைகளை வீசி தாக்கியது. அதில், படகில் இருந்த 7 தீவிரவாதிகள் பலியாகினர்.
2 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் பெஷாவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பலியானவர்களில் ஒருவரது உடல் மட்டுமே மீட்கப்பட்டது. மற்ற 6 பேரின் பிணங்கள் ஆற்று நீரில் மூழ்கிவிட்டன.
அமெரிக்க உளவுத்துறை தற்போது முதன் முறையாக இதுபோன்ற தாக்குதலில் ஈடுபட்டு வெற்றியும் பெற்றுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply