பாராளுமன்றம் ஓட்டெடுப்பில் ஜெர்மனி பிரதமராக ஏஞ்சலா மெர்கெல் 3–வது முறையாக தேர்வு
ஜெர்மனியில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் ஏஞ்சலா மெர்கெலின் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இருப்பினும் கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து கடந்த வாரமே உடன்பாடு ஏற்பட்டது. இதனை அடுத்து பாராளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடந்தது.அதில் பிரதமர் ஏஞ்சலா மெர்கெலுக்கு ஆதரவாக 462 ஓட்டுகளும், எதிராக 150 ஓட்டுகளும் கிடைத்தன. 9 எம்.பி.க்கள் ஓட்டெடுப்பை புறக்கணித்தனர். எனவே ஏஞ்சலா மெர்கெல் ஜெர்மனியின் பிரதமராக 3–வது முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply