சில இராஜதந்திரிகள் உள்ளக விடயங்களில் தலையிடுவதாக இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது
இலங்கையின் உள்ளக விடயங்களில் சில இராஜதந்திரிகள் தலையிடுவதாக இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். போருக்கு பின்னர் விரைவாக முன்னெற்றம் கண்டுவரும் இலங்கையில் சர்வதேச சமூகத்தின் சில பிரிவுகள் தமது நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுத்து செல்ல முயல்கின்றன.இலங்கையின் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
இலங்கையில் பிரச்சினையை தீர்க்கவேண்டுமானால் உள்நாட்டிலேயே அதனை தீர்த்துக்கொள்ள வேண்டும்.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்படும் புலம்பெயர்ந்த தமிழர்கள் இலங்கையின் துரித வளர்ச்சியை ஏற்க மறுக்கின்றனர்.
இந்தநிலையில் வடக்கில் பெரும்பாலான இராணுவ முகாம்கள் வெற்றிடமாக்கப்பட்டு தேசிய பாதுகாப்புக்கு ஏற்ற வகையில் முக்கிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன என்றும் கோத்தபாய குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply