அரசாங்கம் வட மாகாண முதலமைச்சரை கடும்போக்குவாதத்திற்குள் தள்ளுகிறது : மனோ கணேசன்
அரசாங்கம் வட மாகாணசபையின் முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரனை கடும்போக்குவாதத்தை நோக்கித் தள்ளுவதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். வட மாகாணசபையை பாதுகாப்பதற்கு பதிலாக அரசாங்கம், முதலமைச்சரை கடும்போக்குவாதத்தை நோக்கி நகர்த்தி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். தமிழ் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் உரிய தீர்வுத் திட்டங்களை வழங்கத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.இந்த காரணத்தினாலேயே வட மாகாணசபையில் சர்வதேச யுத்தக் குற்றச் செயல் விசாரணை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் சமூகத்திற்கு ராஜபக்ஷ அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் தலைவர்கள் உள்நாட்டுப் பிரச்சினைகளை வெளிநாடுகளில் பேசுவதாகவும், உலகம் முழுவதும் விஜயங்களை மேற்கொண்டு முறைப்பாடு செய்வதாகவும் அரசாங்கம் குற்றம் சுமத்தி வருகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், யாழ்ப்பாணத்திற்கு சென்று தமிழ் மக்களின் பிரச்சினைகளை பார்வையிடாது வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க போன்றோரும் உலக நாடுகளுக்குச் சென்று தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டம் குறித்து பேசி வருவதாகத் தெரிவித்துள்ளார். 2009ம் ஆண்டு மே மாதம் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியின் அடிப்படையில், 13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply