சவூதி மன்னருடன் ஒபாமா சந்திப்பு

சவூதி மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ் அல் சவூத்-தை அமெரிக்க அதிபர் ஒபாமா இன்று சந்தித்து பேசினார். சிரியா விவகாரத்தினால் சவூதி அரேபியா-அமெரிக்கா இடையிலான நல்லுறவில் சுணக்க நிலை ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் மன்னருடனான இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சிரியாவின் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிராக புரட்சி செய்யும் குழுக்களுக்கு பயிற்சியும், ஆயுதங்களையும் வழங்கி வரும் சவூதி அரேபியாவின் நடவடிக்கையை ரசாயன ஆயுதங்களை ஒப்படைக்க ஆசாத் சம்மதித்த பின்னர் அமெரிக்கா விரும்பவில்லை என்று கருதப்படுகிறது.

மேலும், அமெரிக்காவுக்கு எதிரான போக்கை கடைபிடித்து வரும் ஈரானை ஆதரிப்பதிலும் சவூதி அரசு அதிக ஆர்வம் காட்டி வருகிறது. இந்த பிணக்குகள் அனைத்தும் ஒபாமாவின் இந்த சந்திப்பின் போது பேசி தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்விவகாரங்கள் தொடர்பாக பாலைவன முகாமில் தங்கியுள்ள மன்னர் அப்துல்லாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், இன்றிரவு சவூதியில் ஓய்வெடுத்து விட்டு நாளை வாஷிங்டன் திரும்ப திட்டமிட்டுள்ள ஒபாமாவுடன் வெளியுறவு துறை செயலாளர் ஜான் கெர்ரி, ஒபாமாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ் ஆகியோர் வந்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply