தங்களை சவுதி மன்னர் சிறை வைத்து உள்ளதாக இளவரசிகள் அதிபர் ஒபாமாவுக்கு தகவல்
சவுதி அரேபிய அரசர் அப்துல்லாவின் முன்னாள் மனைவி அலனடு அல்பயாஸ் (வயது57). ஜோர்டானை சேர்ந்த இவர் தற்போது லண்டனில் வசித்து வருகிறார். மன்னர் அப்துல்லா இவரை கடந்த 2003 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். சவுதி அரேபியா அரண்மனையில் தனது 4 மகள்கள் கைது செய்யப்பட்டு காவல் இருப்பதாகவும் அவர்களை மீட்டுத்தருமாறும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிடம் விண்ணப்பித்து உள்ளார் செய்தி நிறுவனத்துக்கு அல்பயாஸ் அளித்த பேட்டியில் தனது மகள்கள் ஹர்,மஹா,ஹலா,மற்றும் ஜவஹர் ஆகியோர் கடந்த 13 வருடமாக சிறைவக்கப்பட்டு உள்ளனர்.தனது மகள்களுக்கு எதிரான உரிமை மீறல்களுக்கு அதிபர் ஒபாமா தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.4 இளவரசிகளை பூட்டி வைத்து உள்ளார். தலைவர்களை சந்திக்க அவர் வெட்கபட்ட வேண்டும் என இளவரசி என சவுதி இளவரசிகள் 2 பேர் அதிபர் ஒபாமாவுக்கு செய்தி அனுப்பி உள்ளனர். மேலும் ஒபாமா தங்களது தந்தையை சந்திக்கவும் வலியுறுத்தி உள்ளனர்.
சேனல் 4-க்கு பிரத்யேக கேமரா மூலம் பேட்டிய அளித்த இளவரசிகள் கூறியதாவது:-
நாங்கள் இளவரசி சாகர் மற்றும் ஜவஹர் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக தங்கள் தந்தை, மன்ன் ர் மூலம், வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளோம். என்று கூறினர்
கடந்த 13 வருடங்களாக ஜித்தாவில் உள்ள அரண்மனையில் காவல் வைக்கபட்டு உள்ளனர். அவர்கள் ஆயுதம் தாங்கிய பாதுகாவலர்கள் இன்றி வெளியே செல்ல முடியாது. வெளிநாடுகளுக்கும் செல்ல முடியாது.அவர்களுக்கு உலகத்துடன் தொடர்பு கொள்வதற்கு ஒரே வழி
இண்டெர்நெட் வழியாகத்தான்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply