எகிப்தில் முன்னாள் அதிபர் மோர்சி ஆதரவாளர்களுக்கு மரண தண்டனை
எகிப்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் முகமது மோர்சி கடந்த ஜூலை மாதம் ராணுவத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். எனவே மோர்சியின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். அதை தொடர்ந்து கலவரம் மூண்டது. அதில் ஏராளமானவர்கள் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் கலவரத்தின்போது ஒரு குழந்தை உள்ளிட்ட 2 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக அலெக்சாண்ட்ரியா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு மோர்சி ஆதரவாளர்கள் 2 பேருக்கு மரண தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தது.
மேலும் இந்த கலவரத்தில் ஈடுபட்ட 60 பேருக்கு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மின்யா, தெற்கு கெய்ரோ மாகாணங்களில் நடந்த கலவரத்தில் போலீசாரை கொலை செய்ததாக 529 பேருக்கு கடந்த வாரம் மரண தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply