பொதுவான வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிக்கத் தயார் :பொன்சேகா

பொதுவான வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிக்கத் தயார் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மிகவும் பொருத்தமான ஒருவரை தேர்தலில் போட்டியிடச் செய்ய எதிர்க்கட்சிகள் முனைப்பு எடுத்தால், ஜனநாயகக் கட்சி முழு அளவில் ஆதரவளிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தனிப்பட்ட ரீதியில் யாருக்கும் ஆதரவளிக்கத் தயாரில்லை எனவும் அவர், பொதுவான வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளி;க்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயற்பட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

கட்சி பல்வேறு தடைகளைத் தாண்டி தேர்தலில் ஈட்டியுள்ள வெற்றி மகிழ்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிடும் உத்தேசம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply