அரசாங்கம் யாருக்கும் அடிபணியாது : ஜனாதிபதி

இலங்கை மக்களுக்கு உரிமைகளை வழங்க சர்வதேச நாடுகள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்று ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசாங்கம் எந்தநேரத்திலும் இலங்கை மக்களின் உரிமைகளை பாதுகாத்தே வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தொழிலாளர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

தாய்நாட்டையும், சுதந்திரத்தையும் காப்போம் என்ற தொனிப்பொருளில் குறித்த மே தின நிகழ்வு இடம்பெற்றது.

இதேவேளை தமது அரசாங்கம் யாருக்கும் அடிபணியாது என்றும், அடிபணிய செய்யவும் முடியாது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply