உலகின் மிக வயதான மனிதர் 111–வது வயதில் மரணம்
அமெரிக்காவில் மன் நாட்டனில் உள்ள எஸ்பிள நாடு பகுதியை சேர்ந்தவர் அலெக்சாண்டர் இமிச். 111 வயது முதியவர். உலகிலேயே மிக வயதானவர் என்று அறிவிக்கப்பட்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இவரது பெயர் இடம் பெற்றிருந்தது. இந்த நிலையில் இவர் நேற்று தனது வீட்டில் மரணம் அடைந்தார். கடந்த 1903–ம் ஆண்டு போலந்து நாட்டில் செஸ்டோசோவா என்ற இடத்தில் பிறந்தார். நாசி படைகளின் தாக்குதலை தொடர்ந்து அங்கிருந்து தனது மனைவியுடன் வெளியேறினார். 1951–ம் ஆண்டில் கானக்டிகட்டில் வாட்டார்பரியில் குடியேறினார்.
இவர் முதல் மற்றும் இரண்டாம் உலகப் போரின் போது உயிர் வாழ்ந்தவர் என்ற பெருமை பெற்றவர். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை. சிக்கன் மற்றும் மீன் உணவு வகைகளை விரும்பி சாப்பிட்டு வந்தார். அதனால் அவர் உடல் நலத்துடன் வாழ்ந்ததாக நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply