புகலிடக் கோரிக்கையாளர்கள் மீது அவுஸ்திரேலியா அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றது : பமிலா குர்
புகலிடக் கோரிக்கையாளர்கள் மீது அவுஸ்திரேலிய அரசாங்கம் அழுத்தங்களை பிரயோகித்து வருவதாக புகலிடக் கோரிக்கையாளர் வள நிலையத்தைச் சேர்ந்த பமிலா குர் (Pamela Curr) குற்றம் சுமத்தியுள்ளார். நாட்டை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் புகலிடக் கோரிக்கையாளர்களை பலவந்தப்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். பல்வேறு வழிகளில் இவ்வாறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அச்சுறுத்துவதன் மூலம் புகலிடக் கோரிக்கையாளர்களை சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பி வைக்க முயற்சிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேற முயற்சிக்கின்றமை நிரூபிக்கப்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு மேன்முறையீடு செய்வதற்கான சந்தர்ப்பங்களை ஒடுக்கும் வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply