சஜித் பிரதித் தலைவர், ரவி, ஹரேன், அகில, ரஞ்சித், தலதா, எரான் ஆகியோருக்கும் பதவி
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கட்சியின் உதவித் தலைவராக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவராக அண்மையில் ஊவா மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்ட ஹரேன் பெனாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
பொருளாளராக பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரட்னவும் கட்சியின் சிரேஸ்ட உப தவிசாளராக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டாரவும் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசமும் நியமிக்கப்பட்டுள்ளதோடு கட்சியின் தேர்தல் செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரல நியமிக்கப்பட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply