நவராத்திரி விரதம் இன்று ஆரம்பம்

உலகம் முழு வதிலும் வாழும் இந்துக்கள் ஒவ்வொரு ஆண்டிலும் புரட்டாதி மாதம் வருகின்ற பூர்வபட்ஷ பிரதமை முதல் நவமி ஈறாக உள்ள ஒன்பது தினங்களும் நவராத்திரி தினங்களாக வெகு சிறப்பாக கொண்டாடுகின்றனர். இதில் முதல் மூன்று நாட்கள் கிரியா சக்தியான அன்னை துர்க்கையையும். அடுத்த மூன்று தினங்கள் இச்சாசக்தியான திருமகளையும், கடைசி மூன்று நாட்கள் ஞான சக்தியான சரஸ்வதியையும் வேண்டி பூஜைகள் இடம்பெறுகின்றன.

நவராத்திரியானது மனித குல விருத்திக்கும் மனிதனாக வாழ்வதற்குமான வழிவகைகளை ஏற்படுத்துகின்றது. ஞானம், செல்வம், வீரம் இந்த மூன்றையும் பெறுவதற்காக நாம் முப்பெரும் தேவிகளையும் வேண்டி பிரார்த்தனை செய்ய வேண்டிய மிக சிறப்பான காலமாகும.

இதில் ஒரு பிரதான அம்சமாக கொலு வைத்தல் அமைந்துள்ளது. எமது இந்து மதத்தில் பல நூறு பிறவிகள் எமக்கு உண்டு என கூறப்படுகின்றது. இதை “புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்மிருகமாகிப் புறவையாய்ப் பாம்பாகித் கல்லாய் மனிதராய் பேயாய்க் கணங்களாய் முனிவராய்த் தேவராய்…. என்று மாணிக்கவாசகர் பரிணாம வளர்ச்சியை பாடி வைத்துள்ளார். இத்தத்துவத்தின் அடிப்படையிலேயே கொலுப்படிகள் அமைக்கப்படுகின்றன.

மேலும் இன்று இந்துக்களாகிய நாம் வீடுகளில் கும்பம் வைத்து நவராத்திரியை பக்தி சிரத்தையுடன் கடைப்பிடிப்போமாக.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply