சர்வதேச அனர்த்த முகாமைத்துவ மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பம் 460 உள்நாட்டு, வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்பு

இலங்கை, சுனாமி அனர்த்தத்திற்கு முகம் கொடுத்து 10 வருடங்கள் நிறைவடைவதையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “எதிர்காலத்தில் எங்களுக்கு வேண்டும்; பாதுகாப்பான இலங்கை” என்ற தொனிப் பொருளிலான சர்வதேச அனர்த்த முகாமைத்துவ மாநாடு இன்று (24) கொழும்பில் ஆரம்பமாகிறது. பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் இம் மாநாட்டில் சுனாமியால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் உட்பட 460 உள்நாட்டு, வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்குபற்ற இருப்பதாக இடர்முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

கடந்த 10 வருட காலத்தில் சுனாமி உட்பட பல்வேறு அனர்த்தங்களுக்கு முகம் கொடுத்த அனுபவங்களை பகிர்தல் அதன் மூலம் பெற்ற பாடங்கள் கடந்த காலத்தில் எட்டிய முன்னேற்றங்கள் உட்பட பல விடயங்கள் இந்த மாநாட்டில் ஆராயப்பட இருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர் மாநாடு 3 தினங்கள் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறும் என்றும் குறிப்பிட்டார்.

இடர் முகாமைத்துவ மாநாடு தொடர்பாக விளக்கும் ஊடக மாநாடு அமைச்சில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர்,

2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தினால் 35 ஆயிரம் பேர் இறந்ததோடு ஒரு இலட்சம் வீடுகள் சேதமடைந்தன. 1.5 பில்லியன் டொலர் சேதம் ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டது.

அனர்த்தம் ஏற்பட்ட பின்னர் உதவுவதை விட மக்களுக்கு முன்னெச்சரிக்கை அளிப் பதற்கே எமது அரசாங்கம் முன்னுரிமை வழங்கி வருகிறது. இதற்காக மக்களை அறிவூட்டி வருவதோடு சகல முகாம்களிலும் 25 இராணுவ வீரர்களுக்கு இடர் முகாமைத்துவ பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

மீண்டுமொருமுறை சுனாமி அனர்த்தம் ஏற்பட்டால் எதுவித உயிர்ச் சேதமுமின்றி முகாமைத்துவம் செய்யக்கூடிய வல்லமை இலங்கைக்கு காணப்படுகிறது. எதிர்காலத்தில் வேறு விதமான அனர்த்தங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்திருக்கிறார்கள். இதற்காக ஏனைய அமைச்சுக்களுடன் இணைந்து கூட்டுத் திட்டங்கள் செற்படுத்தப்பட்டு வருகிறது. மண் சரிவு, வெள்ள அபாயங்களை மட்டுப்படுத்தவும் அநேக திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

சுனாமி அனர்த்தம் ஏற்பட்டது முதல் கடந்த 10 வருட காலத்தில் நாம் முன்னெடுத்த திட்டங்கள் தொடர்பான அறிக்கை டிசம்பர் 26 ஆம் திகதி அனுஷ் டிக்கப்படும் தேசிய பாதுகாப்பு தினத்தின் போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும். இந்த அறிக்கை 2015 மார்ச் மாதம் ஜப்பானில் நடக்கும். சர்வதேச இடர் மட்டுப்படுத்தல் மாநாட்டில் வெளியிட்டு வைக்கப்படும்.

சுனாமியினால் பாதிக்கப்பட்ட ஏனைய நாடுகளை விட எமது நாடு துரிதமாக எழுச்சி பெற்றது. அனைவருக்கும் வீடுகள் நிர்மாணித்து வழங்கப்பட்டன. இது குறித்து சக நாடுகள் எம்மை பாராட்டு கின்றன. இலங்கையில் முதற்தடவையாகவே எவ்வாறான மாநாடு நடைபெறுகிறது என்றார். இந்த ஊடக மாநாட்டில் அமைச்சின் செயலாளர் மொஹமட் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply