மாணவர்களுக்கு கணினிகளை வழங்கி தொழில்நுட்ப அறிவை வளர்க்க பிரதி அமைச்சர் ஏற்பாடு
தொலைத்தொடர்புகள், தகவல் தொழில்நுட்பவியல் பிரதி அமைச்சராக பதவி ஏற்றவுடன் முதல் கட்ட செயல் திட்டமாக கொழும்பில் உள்ள மூவின பாடசாலைகளுக்கும் குறிப்பாக தமிழ் பாடசாலைகளில் அமைச்சின் மூலம் விரைவில் கணினி கூடங்கள் அமைப்பதற்காக ஏற்பாடு செய்துள்ளதாக ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் தொலைத்தொடர்புகள், தகவல் தொழில்நுட்பவியல் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பிரபா கணேசன் விடுத்துள்ள ஊடக செய்திக் குறிப்பில்,
´எனது ஏற்பாடுகளை கேட்டறிந்த அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இதற்கான ஏற்பாடுகளை உடனே செய்து கொடுக்கும்படி தனது செயலாளருக்கு அறிவித்துள்ளார். இதற்காக அமைச்சருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
முதல்கட்டமாக கொழும்பில் ஆரம்பமாகும் கணினிகள் வழங்கும் இந்த திட்டம் விரைவிலேயே மலையகம், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட கேந்திர நிலையங்களின் மூலம் அப்பகுதியில் உள்ள மாணவ மாணவியர்களுக்கு கணினிகளை வழங்கி அதன் மூலம் அவர்களின் தொழில்நுட்பவியல் அறிவை வளர்ப்பதும் எனது திட்டமாக இருக்கிறது.
இந்த அரசுடன் இணைந்து கொண்டதினால் தான் எனது மக்களுக்கு சேவை செய்வதற்காக வாய்ப்பு கிடைத்திருந்ததையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். நான் எதிர்ப்பார்த்த காலத்தில் இந்த பிரதி அமைச்சர் பதவி கிடைத்திருந்தால் எனது மக்களுக்கு எவ்வளவோ சேவை செய்திருக்கலாம்.
ஆனாலும் கூட எஞ்சியிருக்கும் இந்த குறுகிய காலத்திற்குள் இந்த அமைச்சுப் பதவியைப் பயன்படுத்தி என்னால் முடிந்த வரை மக்களுக்கு சேவை செய்வேன் என்பதையும் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.´ – இவ்வாறு பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply