அபராதத்தை செலுத்தாவிட்டால் சொத்துக்கள் முடக்கப்படும்: அரசு சிறப்பு வக்கீல் பவானிசிங் பேட்டி

முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின் அரசு சிறப்பு வக்கீல் பவானிசிங் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-‘சொத்து குவிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட சொத்துக்களின் மதிப்பு இன்றைய நிலவரப்படி பார்த்தால் 5 மடங்கு அதிகரித்து இருக்கும். அதன் அடிப்படையில் அபராதம் விதிக்க வேண்டும். ஆனால், நான் ரூ.100 கோடி அபராதம் விதிக்கிறேன்’ என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார். மேலும் அபராத தொகையை செலுத்தாவிட்டால், வழக்கில் சம்பந்தப்பட்ட சொத்துக்கள் முடக்கப்படும் என்றும் அவர் தீர்ப்பில் தெரிவித்தார்.ஜெயலலிதா தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை நீதிபதி தள்ளுபடி செய்து விட்டார். தண்டனையை குறைக்க கோரியும் மனுதாக்கல் செய்யப்பட்டது. ஆனால், கொடுத்த தீர்ப்பில் மாற்றம் இல்லை என்று கூறி அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து விட்டார்.

சிறையில் ஜெயலலிதாவுக்கு மருத்துவ பரிசோதனை செய்தபோது, ரத்த அழுத்தம் இருப்பது தெரியவந்தது. அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு பவானி சிங் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply