அமெரிக்கப் பத்திரிகையாளர்களை கொன்ற ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் அடையாளம் காணப்பட்டனர்

அமெரிக்கப் பத்திரிகையாளர் உட்பட மூன்று பேரைக் கொல்லும் ஐ.எஸ். அமைப்பின் வீடியோக்களிலுள்ள நபரை அடையாளம் கண்டுள்ளதாக அமெரிக்க காவல்துறையான‌ எஃப்.பி.ஐ. தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அமெரிக்கப் பத்திரிகையாளர்கள் ஜேம்ஸ் ஃபாலி, ஸ்டீவன் ஸாட்லாஃப் மற்றும் பிரிட்டனின் மீட்புப் பணியாளர் டேவிட் ஹெயின்ஸ் ஆகியோர் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினரால் கொல்லப்பட்டனர். இவர்கள் கொல்லப்படுவதை அந்த அமைப்பு வீடியோ எடுத்து சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அனுப்பியது. இந்த வீடியோக்களில் முகமூடி அணிந்துகொண்டு, கறுப்பு நிற உடையில், கையில் கத்தியுடன் உள்ள நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.அந்த நபர் தென்பகுதி பிராந்திய ஆங்கில உச்சரிப்புடன் பேசுகிறார். அவர் இடது கையை அதிகமாகப் பயன்படுத்தும் நபராக இருக்க வேண்டும். வீடியோக்களைக் கூர்மையாக ஆராய்ந்ததில் அவருடைய சராசரி உயரம் மற்றும் எடை கணக்கிடப்பட்டுள்ளதென எஃப்.பி.ஐ. தெரிவித்துள்ளது. மேலும் அந்தத் நபர் அடையாளம் காணப்பட்டிருந்தாலும் அவருடைய பெயரையோ அல்லது நாட்டையோ குறிப்பிடவில்லை. என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply