மன்மோகன் சிங்குக்கு ஜப்பான் விருது: சோனியாகாந்தி பாராட்டு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, ஜப்பான் நாட்டின் மிக உயரிய தேசிய விருது (‘தி கிராண்ட் கார்டன் ஆப் தி ஆர்டர் ஆப் தி பவுலோனியா பிளவர்ஸ்’) அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த விருது, அவர் ஜப்பான்-இந்தியா இடையேயான உறவு தழைப்பதற்கும், வலுப்படுவதற்கும் 35 ஆண்டுகளுக்கு மேலாக பங்களிப்பு செய்ததற்காக வழங்கப்படுவதாக ஜப்பான் கூறுகிறது. இந்த விருதைப் பெறும் முதல் இந்திய தலைவர் மன்மோகன் சிங் ஆவார்.இந்த விருதுக்காக மன்மோகன் சிங்குக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “இந்த விருது ஒரு ராஜதந்திரிக்கு கிடைத்துள்ள அபூர்வமான, நல்ல தகுதியான அங்கீகாரம் ஆகும். மன்மோகன் சிங்குக்கு இந்த விருது கிடைத்திருப்பது நமக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்துக்கு பெருமை சேர்க்கிறது” என கூறி உள்ளார்.
காங்கிரஸ் கட்சி ஊடகப்பிரிவின் தலைவர் அஜய் மக்கான், ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில், “டாக்டர் மன்மோகன் சிங் ஜப்பானின் மிக உயரிய சிவிலியன் விருதை பெறுகிறார். பாராட்டுக்கள். உலகம், செயலைத்தான் மதிப்பிடுகிறதே தவிர சொல்லாட்சியை அல்ல” என குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply