இந்தியாவில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகளை பயன்படுத்துகிறது பாகிஸ்தான்: அமெரிக்கா குற்றச்சாட்டு
இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்கு பாகிஸ்தான், தீவிரவாதிகளை பினாமிகளாக பயன்படுத்துகிறது என அமெரிக்கா பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது.இந்தியாவில் தொடர்ந்து பாகிஸ்தான், தீவிரவாதிகளைக் கொண்டு நாசவேலைகளை அரங்கேற்றுகிறது. பிரதமராக பதவி ஏற்ற பின்னர், கடந்த ஆகஸ்டு மாதம் 2–ந் தேதி காஷ்மீர் மாநிலம் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு லே நகரில் பாதுகாப்பு படையினர் மத்தியில் உரையாற்றினார்.அப்போது அவர், ‘‘நமக்கு அருகில் இருக்கும் நாடு (பாகிஸ்தான்) நம்மிடம் மரபு சார்ந்த போர் புரியும் பலத்தை இழந்து விட்டது. எனினும், நமது நாட்டில் தீவிரவாதத்தை தொடர்ந்து தூண்டிவிட்டு மறைமுகப் போரில் ஈடுபட்டு வருகிறது’’ என குற்றம் சாட்டினார்.
இப்போது பிரதமர் மோடியின் குற்றச்சாட்டை ஊர்ஜிதப்படுத்துவதுபோன்று அமெரிக்காவும் கூறி உள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க பாராளுமன்றத்தில் அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன், அறிக்கை ஒன்றை அளித்துள்ளது. அந்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
பாகிஸ்தானில் இயங்கி வருகிற தீவிரவாதிகள் இந்தியா, ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்துவதில் தொடர்ந்து கவனம் செலுத்துகின்றனர். இது ஆப்கானுக்கு கேடாகவும், பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு தீங்காகவும் அமைகிறது.
ஆப்கானிஸ்தானில் செல்வாக்கை இழந்த நிலையில், தீவிரவாதிகளை அங்கு பாகிஸ்தான் மறைமுகமாகப் பயன்படுத்துகிறது. இதேபோன்று வலுவான இந்திய ராணுவத்தை எதிர்கொள்வதற்கு தீவிரவாதிகளை பினாமிகளாக பயன்படுத்துகிறது.
இந்தியாவில் பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்பதற்கு 3 நாட்கள் முன்பாக ஆப்கானிஸ்தானில் ஹெராத்தில் உள்ள இந்திய துணை தூதரகம் தாக்குதலுக்கு ஆளானது. அங்கு ஆயுதம் ஏந்திய 4 தீவிரவாதிகள் கடும் தாக்குதல்கள் நடத்தினர். பிரதமர் மோடி இந்து தேசியவாத குழுக்களுக்கு நெருக்கமானவர் என்ற எண்ணத்தில், அவர் பதவி ஏற்பு நேரத்தில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இந்த தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்புதான் காரணம் என கடந்த ஜூன் மாதம் அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்தது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply