இந்தியாவில் வெளிநாட்டு தூதரங்கள் மீது தற்கொலை தாக்குதல் நடத்தப்படலாம் உளவுத்துறை எச்சரிக்கை

இந்தியாவில் வெளிநாட்டு தூதரங்கள் மீது தற்கொலை தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகளின் தூதரகத்தை குறிவைத்து தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதல் நடத்தலாம் என்று மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து தூதரகங்களில் முக்கிய நகரங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய உளவுத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. தீவிரவாதிகள் எச்சரிக்கை பட்டியலில் டெல்லி, சென்னை, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத் மற்றும் பெங்களூர் உள்ளிட்ட நகரங்களும் அடங்கும். ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் இணைய தள பிரச்சாரத்தினால் ஈர்க்கப்பட்டுள்ள படித்த இளைஞர்கள் இந்த தாக்குதலை நடத்தலாம் என்று உளவுத்துறை அச்சம் தெரிவித்துள்ளது.  மேற்கத்திய நாடுகளை இலக்காக கொண்டு தாக்குதல்கள் முன்னெடுக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.சிரியா மற்றும் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறார்கள். இந்த தீவிரவாத இயக்கம் சமீபத்தில் இளைஞர்கள் தங்களது நாட்டில் தீவிரவாதத்தை பரப்பும் தாக்குதல்களை முன்னெடுக்க கேட்டுக் கொண்டது. என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற நாடுகளில் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள், தீவிரவாத குழுவை ஈர்க்க தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இந்தியா–பாகிஸ்தான் இடையில் உள்ள வாகா எல்லையில் கடந்த சனிக்கிழமை மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதில், 61 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலீபான் இயக்கத்தில் இருந்து பிரிந்த பாகிஸ்தான் ஜமாத் அரார் என்ற இயக்கம் பொறுப்பு ஏற்றுக்கொண்டது. இவர்களுக்கு அல்–கொய்தா இயக்கத்துடனும் தொடர்பு உள்ளது. தலீபான்களைப் போல இல்லாமல், பாகிஸ்தானை தாண்டி, இந்தியா உள்ளிட்ட நாடுகளையும் குறிவைத்து அந்த இயக்கம் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில், வாகா எல்லை தாக்குதலைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் ஜமாத் அரார் இயக்கம் கொலை மிரட்டல் விடுத்துள்ளது.

தலீபான்களின் இந்த பகிரங்க கொலை மிரட்டல் காரணமாக, இந்தியாவில் பாதுகாப்பு அமைப்புகள் உஷார்படுத்தப்பட்டு உள்ளன. ஏற்கனவே, தீவிரவாத இயக்கங்களின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவது குறித்து பிரதமர் மோடியிடம் பாதுகாப்பு அமைப்புகள் அவ்வப்போது எடுத்துரைத்து வருகின்றன. அல்–கொய்தா இயக்கம், இந்தியாவிலும் தனது கிளையை தொடங்குவதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது. அதிலிருந்தே, நாடு முழுவதும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply