பாகிஸ்தானில் மூன்று நாள் துக்கம் தொடங்கியது: தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது
பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள ராணுவ பொது பள்ளி மற்றும் கல்லூரிக்குள் புகுந்த தெஹ்ரிக்-இ-தலிபான் இயக்க தீவிரவாதிகள் பள்ளியில் இருந்த குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 132 பள்ளி குழந்தைகள் உள்பட 145 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பல குழந்தைகள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த குழந்தைகளை கூட்டாக அடக்கம் செய்ய பெற்றோர்கள் முடிவெடுத்துள்ளனர். இதை தொடர்ந்து இறுதி சடங்குகளும் அங்கு நடைபெற்று வருகின்றன.இதனிடையே துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட குழந்தைகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அந்நாட்டில் மூன்று நாள் துக்கம் அனுஷ்டிக்க அரசு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து மூன்று நாள் துக்கம் உடனடியாக தொடங்கப்பட்டு இன்று காலை முதல் நாட்டின் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. அந்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளும் இன்று மூடப்பட்டுள்ளன. ஒரு சில பள்ளிகளில் இறந்த குழந்தைகளுக்கு அஞ்சலி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply